கிளிநொச்சி – உதயபுரத்தை சேர்ந்த தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நீண்ட நாட்களாக பாடசாலை அனுமதியின்றி அலைந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
குறித்த குடும்பத்தாருடன் இது தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் அம்மாணவியை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் (கனிஸ்ர) சேர்த்துக்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அம்மாணவி கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இம்மாணவியின் கல்வி நடவடிக்கை சில நாட்களாக இழுபறியில் இருந்த நிலையில் இம்மாணவிக்கான எதிர்கால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவியின் தாய் கூறுகையில்,
தாம் பல முறை ஸ்ரீதரன் எம்.பியை சந்திப்பதற்காக முயற்சித்த வேளையில் வீதியில் தம்மை இடைமறிக்கும் சில ஊடகவியலாளர்கள் ஸ்ரீதரன் எம் பியை சந்திக்க தடை விதித்ததுடன் தமது குழந்தையின் கல்வி நடவடிக்கையில் உதவுவதை விடுத்து சுயநல நோக்கோடு சில ஊடகவியலாளர்கள் செயற்பட்டமை மனதிற்கு வேதனை அளிப்பதாக குறித்த தாய் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர் மேற்குறித்த மாணவியின் கல்வி தொடர்பில் கோட்ட கல்வி அதிகாரிக்கு பாடசாலையில் சேர்த்து கொள்வதற்கான பணிப்புரையை விடுத்திருந்தார்.
கோட்ட கல்வி அதிகாரி குறித்த மாணவி வசிக்கும் சூழலில் உள்ள பாடசாலைக்கு இம்மாணவியை சேர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
குறித்த பாடசாலையின் பெண் அதிபர் மாணவிக்கான அனுமதியை வழங்காமல் நிராகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒட்டு மொத்தத்தில் மாணவியின் எதிர்காலம் தொடர்பில் முடிவு எடுக்க வேண்டிய சிலர் மாணவியின் கல்வி விடயத்தை விளையாட்டாக எடுத்து இருந்த சூழ்நிலையில் ஊடகவியலாளர்களின் தவறான கருத்துக்களும் மாணவியையும் மற்றும் அவரது குடும்பத்தையும் பாதித்து இருந்துள்ளது.
இச் சூழலில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களால் மாணவியின் எதிர்கால கல்வி தொடர்பில் சரியான முடிவு எடுக்கப்பட்டு பாடசாலையில் சேர்த்து கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்