தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாணவர்களும் சாதனை!!

இடம்பெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முன்னிலையிலுள்ள 3 தமிழ் மாணவர்களில் இருவர் 2 ஆம் இடத்தினையும் ஒருவர் 3 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், முதலாம் இடத்தை பிலியந்தல -சோமவீர சந்ரசிறி வித்தியாலயத்தைச் சேர்ந்த புமித் மெத்துனுல் விதானகேயும் வெயங்கொட – சென்.மேரிஸ் கல்லூரியின் குருகுலசூரிய சனுபா திமத் பெரேராவும் பெற்றுள்ளனர். இருவரும் 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.

இதேவேளை, மினுவாங்கொட ரெஜி ரணதுங்க ஆரம்பப்பாடசாலை மாணவனான சென்ஜுய் அகித்ம ஹெட்டியாராச்சி, யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவனான எம்.திகழொளிபவன், சாவகச்சேரி ஆரம்ப பாடசாலை மாணவனான நவஸ்கன் நதி ஆகியோர் 198 புள்ளிகளைப் பெற்று 2 ஆவது இடத்திலுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் மகேந்திரன் திகழொளிபவனும், சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த நவாஸ்கன் நதியும் அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடத்தைப்பெற்றுள்ள அதேநேரம், தமிழ்மொழி மூலம் 198 புள்ளைகளைப் பெற்று முதலாம் இடத்தையும் இருவரும் பகிர்ந்துள்ளனர்.

மூன்றாம் இடத்தில் ரெஜி ரணத்துங்க ஆரம்ப வித்தியாலயம் – மினுவங்கொடயைச் சேர்ந்த ஹெட்டியாராச்சி செனுஜி அக்கித்ம ஹெட்டியாராச்சி பெற்றுள்ளார்.

இந்நிலையில் தமிழ் மொழியில் இரண்டாம் இடத்தை வவுனியா சிவபுரம் ஆரம்ப பாடசாலையை சேர்ந்த பாலக்குமார் ஹரித்திக்ஹனுசுஜா பெற்றுள்ளார். அவர் 197 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில் அகில இலங்கை ரீதியில் அவர் 3 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.

முழுமையான புள்ளிவிபரங்கள் இதோ

இதேவேளை, 2018 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியாக வெட்டுப் புள்ளிகளும் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, மாவட்ட ரீதியாக தமிழ் மொழி மூலமான வெட்டுப் புள்ளிகள் விபரம் வருமாறு,

கொழும்பு – 165

கம்பஹா – 165

களுத்துறை – 165

கண்டி – 165

மாத்தளை – 165

நுவரெலியா – 162

காலி – 165

மாத்தறை – 165

ஹம்பாந்தோட்டை – 160

யாழ்ப்பாணம் – 164

கிளிநொச்சி – 163

மன்னார் – 162

வவுனியா – 164

முல்லைத்தீவு – 163

மட்டக்களப்பு – 164

அம்பாறை – 163

திருகோணமலை – 162

குருணாகல் – 165

புத்தளம் – 162

அநுராதபுரம் – 162

பொலன்னறுவை – 162

பதுளை – 163

மொனராகலை – 162

இரத்தினபுரி – 162

கேகாலை – 165

Related Posts