முதலாம், இரண்டாம் தரம்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அனைத்துப் பாடசாலைகளும் கடந்த (ஜூன் 29) திங்கட்கிழமை மீளத் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் 5,11 மற்றும் 13ஆம் தரங்களில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் வரும் ஜூலை 6ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படுகிறது.
ஏனைய தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முதலாம், இரண்டாம் தரங்கள் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிக்கப்படவில்லை.
அனைத்து முன்பள்ளிகள் மற்றும் தரம் 1, தரம் 2 வகுப்புகள் ஓகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பம் என்று கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.