தரம் ஒன்று மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கை ஏப்ரல் முதல் இடம்பெறும் – அமைச்சர்

2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், பாடசாலைக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக கூறினார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி பாடசாலை விடுமுறை வழங்கப்படும் என்றும் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி மூன்றாம் வாரத்தில் நடத்தப்படும் என்றும், க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகும் என்றும் தெரிவித்தார்.

மேலும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை மே மாதம் நடத்தி ஜூன் நடுப்பகுதிக்குள் முடிக்க பரீட்சைகள் திணைக்களம் தயாராகி வருவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.

Related Posts