தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின!

2020ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு 162 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு 160 புள்ளிகள் வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருகோணமலை, பதுளை, பொலனறுவை ஆகிய மாவட்டங்களுக்கு 159 புள்ளிகளும் நுவரெலியா, மன்னார், இரத்தினபுரி, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 158 புள்ளிகளும் புத்தளம் மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு 155 புள்ளிகளும் வெட்டுப்புள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Related Posts