தரமுடியாதென்ற மனோபாவத்தில் இருப்பவர்களை தட்டிக் கேட்டால்த்தான் பெற முடியும்.
தட்டிக் கேட்கும் போது தடியெடுத்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று முல்லைத்தீவு கூட்டுறவு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தின் போது தெரிவித்தார்.
அல்லல்களையும் அவலங்களையும் அடிதடியையும் ஏற்று எமது போராட்டங்களை அமைதியாக நடத்திச் சென்றால்த்தான் தர முடியாது என்றவர்களின் மனதிலும் தரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
அத்துடன் தனித்துப் போராடாது ஒற்றுமையுடன் சேர்ந்து தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம் என்பனவே அந்தப் பாடங்கள்.
காந்திஜி தனது அஹிம்சைப் போராட்டத்தை நடத்த இவ்வாறான போராட்டங்கள் ஊக்குவிப்பாக அமைந்தன.
இதே போன்று 1893 இல் முதலாவது தொழிலாளர் வேலை நிறுத்தம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த போராட்டத்தில் இலங்கையின் அச்சுப் பதிப்போர் தொழிலாளர் சங்கம், மாட்டு வண்டிச் சங்கம், டிராம் பஸ் வண்டித் தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களும் இணைந்து கொண்டே ஈடுபட்டன.
அக் காலத்தில் கொழும்புத் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட உணவுப் பொருட்கள், குடிவகை, பழங்கள் மற்றும் இன்னோரன்ன பொருட்கள் 1815 அளவில் அமைத்திருந்த கண்டி இராச்சியத்தில், ஐரோப்பியர்களின் இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு மாட்டு வண்டிகளே பயன்படுத்தப்பட்டன.
இவ்வாறு வண்டிகளைச் செலுத்திச் சென்றவர்கள் அந்த வண்டில்களின் ஆசனத்தில் ஏறி அமர்ந்திருந்து வண்டிகளைச் செலுத்த முடியாது என்ற ஆணையை எதிர்த்தே மாட்டுவண்டில் உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அக் காலத்தில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் என்பன பொதுவாக இடதுசாரி அமைப்புக்களாகவே காணப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.