மோட்டார் சைக்கிளில் பயணிப்போருக்கான தரம் வாய்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய தலைக்கவசம் அணியும் சட்டம் எதிர்வரும் ஏப்றல் மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை தரப்படுத்தும் நிறுவனமும், நுகர்வோர் அதிகார சபையும் இந்த பணிக்கு உதவி வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.