தயா மாஸ்டர் வடமாகாண தேர்தலில் களமிறங்கக் கூடிய சாத்தியம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் tayaa-MASTERஆளும் கட்சியின் சார்பில் களமிறங்கக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து தயா மாஸ்டர் நேரடியாக எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.

இதுவரையில் எந்தவொரு கட்சியும் தேர்தலில் போட்டியிடுமாறு தம்மிடம் நேரடியாக கோரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், ஆளும் கட்சியின் வேட்பாளராக தயா மாஸ்டரை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இறுதிக் கட்டப் போரின் போது தயா மாஸ்டர் படையினரிடம் சரணடைந்திருந்தார்.

ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினர்களான கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர், ஆளும் கட்சியின் சார்பில் அரசியலில் களமிறங்கி முக்கிய பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தயா மாஸ்டர் தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts