தயாரிப்பதற்கு ஒருநாளைக்கு முன்னரே பணிஸ் விற்பனை

பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பொருட்கள், “தயாரிக்கப்பட்ட நாளுக்கு”, முதல்நாளன்றே விற்பனை செய்யப்பட்ட சம்பவ​மொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம், நுவரெலியா- பெக்கும்புர பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

பணிஸ் பொதியிடப்பட்ட பக்கெற்றுகளில், உற்பத்தி செய்யப்பட்ட திகதியென 18.07.2017 திகதியிடப்பட்டுள்ளது. எனினும், அந்த பணிஸ் முதல்நாளான 17.07.2017 அன்றைய தினமே, கடைகளில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது என நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். ​

​பொருட்களை உற்பத்தி செய்த திகதியை, பொய்யாக பொறித்து, இவ்வாறு நுகர்வோரை ஏமாற்றும், பேக்கரி உரிமையாளர்கள் தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts