தயவு செய்து ‘இறைவி’ கதையை சொல்லிடாதீங்க..

விஜய் சேதுபதி, பொபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கமலினி முகர்ஜி, பூஜா ஆகியோர் நடித்த ‘இறைவி’ திரைப்படம் நேற்று வெளியாகி உள்ளது.

திரைப்படத்தின் கதையை விமர்சனத்தில் வெளியிட வேண்டாம் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

karthic-supr-raj

‘நான் இயக்கிய ‘பீட்சா, ஜிகிர்தண்டா’ திரைப்படங்களுக்கு நல்ல முறையில் ஆதரவளித்து வெற்றி பெற வைத்தீர்கள். அதற்காக உங்களுக்கு பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது வெளியாகும் இறைவி திரைப்படத்துக்கு உங்கள் ஆதரவை தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டின்போதும நான் வைக்கும் கோரிக்கையை இப்போதும் வைக்கிறேன். தயவு செய்து திரைப்படத்தின் விமர்சனத்தில் கதையை வெளியிடாதீர்கள்’ இவ்வாறு என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘கதையின் ஒரு பகுதியையாவது சொல்லாமல் எப்படி திரைப்படத்தை விமர்சிப்பது. சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதும்போது முடிவை வெளியிட வேண்டாம் என்று கேட்பார்கள்.

அவர்கள் கேட்காவிட்டாலும் தார்மீக கடமை கருதி ஊடகங்கள் வெளியிடாது. ஆனால் முழு கதையையும் சொல்லக்கூடாது என்பது எப்படி சாத்தியம்.

அதுவும் இப்போது பேஸ்புக், இண்டர்நெட், வட்ஸ் அப் என பொது தளங்கள் பெருகிவிட்ட சூழ்நிலையில் இது சாத்தியமே இல்லை. வெளியாகாத திரைப்படத்தின் கதையையே எழுதிக் கொண்டிருக்கிற காலம் இது.

Related Posts