தம் அடிக்காததால்தான் தம் பிடித்து நிற்கிறேன்! – டி.ராஜேந்தர்

சினிமாவில் இந்த மாதிரியான படங்களை மட்டும்தான் இயக்குவேன் என்ற கொள்கையோடு படங்கள் இயக்கி வருபவர் டி.ராஜேந்தர். 34 வருடங்களுக்கு முன்பு ஒரு தலை ராகம் படத்தை இயக்கியவர், இப்போது ஒருதலைக்காதல் என்ற படத்தை இயக்கி நடித்துக்கொண்டிருக்கிறார்.

tr-rajendran

இந்த படத்துக்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகியிருக்கும் அவர், இந்த படத்தையும் காதல், பேமிலி செண்டிமென்ட் என்று எனது பாணியில் இந்த காலகட்ட ரசிகர்களை மனதில் கொண்டு யூத்தாக இயக்கியிருக்கிறேன் என்கிறார்.

மேலும், என் படங்களில் எப்போதும் சமூகத்துக்கு தப்பான விசயங்களை சொல்லிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன். குறிப்பாக, தம் அடிப்பது, சரக்கு அடிப்பது, வன்முறை போன்ற காட்சிகள் அதிகமாக இருக்காது.

அதேபோன்றுதான இந்த படத்தையும் இயக்கியிருக்கிறேன் என்று சொல்லும், டி.ராஜேந்தர், ஒரு காட்சியில் தம் அடிக்க வேண்டிய காட்சிகள் தேவைப்பட்டாலும் அதை நீக்கி விட்டாராம்.

காரணம், எனது முதல் படமான ஒரு தலை ராகத்திலேயே சந்திரசேகர் நடித்த கேரக்டரில் என்னைதான் எல்லோரும் நடிக்கச் சொன்னார்கள். ஆனால் அதில் தம் அடித்தபடி நடிக்க வேண்டும் என்பதால் நான் மறுத்து விட்டேன்.

சரக்கு அடிக்கிற காட்சியிலாவது தண்ணியை குடித்தபடி நடித்து விடலாம். ஆனால், தம் அடிக்க வேண்டுமென்றால் நிஜமாலுமே சிகரெட் பிடிக்க வேண்டும். அதனால்தான் அந்த கேரக்டரில் நான் நடிக்க மறுத்தேன் என்று கூறும் டி.ஆர்., நான் அப்படி சினிமாவிலும், நிஜத்திலும் தம் அடிக்காமல் இருப்பதினால்தான் இப்போதும தம் பிடித்து நிற்கிறேன். தம் பிடித்து பாடுகிறேன்.

ஆரோக்கியமாக இருக்கிறேன். இன்றைய இளவட்ட ஹீரோக்களுக்கு இணையாக என்னாலும் உடல் எடையை, குறைக்கவோ அதிகரிக்கவோ முடிகிறது என்றால் கெட்ட பழக்கவழக்கங்களை நான் நெருங்க விடாததுதான் காரணம் என்கிறார்.

Related Posts