தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கும் இன்று திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் இன்று பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு பதிலாக பாடசாலை நடவடிக்கைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts