தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கிய சிங்கள மொழி அரச உத்தியோகத்தர்கள்

கம்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 100 அரச உத்தியோகத்தர்களுக்கு 12 நாட்கள் இரண்டாம் மொழியான தமிழ்மொழி பயிற்சிநெறி ஒன்றினை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நடாத்தியது.

அரச ஊழியர்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தபட்ட இந்த பாடநெறியின் இருதி நாள் ஒரு தமிழ் காலாச்சார நிகழ்வாக கம்பளை பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

அதன் போது அரச சிங்கள மொழி உத்தியோகத்தர்கள் தமிழ் கலாச்சரா நிகழ்வுகளை மேடையேற்றியதுடன் இந்நிகழ்வுகள் ஏனையோருக்கு ஒரு முன் உதாரணமாக காணப்பட்டதுடன் மிகவும் இரசிக்க கூடிய தன்மை உடையதாக காணப்பட்டது.

இந் நிகழ்விற்கு தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பனிப்பாளர் ஆர்.பிரசாந் ஆரியரத்தன உட்பட பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் மொழி பயிற்றுவிப்பாளரகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த செயற்திட்டதினை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அரச சேவை முதலாம் மொழியான சிங்கள மொழியினை தமிழ் மொழி அரச உத்தியோகத்தர்களுக்கும், இரணடாம் மொழியான தமிழ் மொழியினை சிங்கள மொழி அரச உத்தியோகத்தர்களுக்கும் பயிற்றுவித்து வருகின்மை குறிப்பிடதக்கது.

Related Posts