தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் – தமிழ் மக்கள் பேரவை ஆராய்வு

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்து தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழு கூடி ஆராய்ந்துள்ளது.

தேர்தல் தொடர்பாக பொதுக் கலந்துரையாடலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் நடைபெற்றது.

இதில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழர்கள் எவ்வாறு கையாளுதல் வேண்டும் என்பது தொடர்பாக உரியவாறு ஆராயப்பட்டது.

இதனடிப்படையில் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் செயற்பட்டுவரும் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுடனும், பொது அமைப்புகளுடனும் கலந்துரையாடி ஜனாதிபதித் தேர்தல் குறித்து கருத்தொருமித்த முடிவை எடுப்பதற்கான முயற்சியில், சமய பெரியார்கள், சமூகப் பெரியார்கள் மற்றும் புலமையாளர்களை உள்ளடக்கிய குழு ஒன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது விரைவில் சந்திப்பினை மேற்கொண்டு மேற்குறித்த தரப்புகளுக்கிடையே ஒருமித்த கருத்தினை ஏற்படுத்தி அதனடிப்படையில் தமிழ் மக்களை நெறிப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts