தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கமாகவே செயற்படும் : இணைத்தலைவர் விக்கினேஸ்வரன் தெரிவிப்பு

தமிழ் மக்கள் பேரவை தற்போதையநிலையில் மக்கள் இயக்கமாகவே செயற்படும் என அதன் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கமாகவே தற்போது செயற்பட்டுவருகிறது. அரசியல் ரீதியாக மாறுவதாக இல்லை.

தமிழ் மக்களை ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டிய அவசியம் எமக்கு உண்டு. தமிழ் மக்கள் பேரவைக்குள் கருத்தொருமித்த அரசியல் கட்சிகள் உள்ளன. அவை தமது அரசியல் பணிகளை முன்னெடுப்பர். அது தொடர்பான எனது தனிப்பட்ட எண்ணத்தை என்னால் இப்போது கூறமுடியாது” என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Related Posts