தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படாது என்கிறார் கஜேந்திரகுமார்!

தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதற்கான உபகுழுவின் செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், இந்த மாத இறுதியில் அதன் அறிக்கை முன்வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரையில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் எதுவும் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts