தமிழ் மக்கள் பேரவையின் மக்கள் கருத்தறியும் செயற்திட்டம் நிறைவு

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு தொடர்பான மக்கள் கருத்தறியும் செயற்திட்டம் நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளதாக பேரவை அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த நிபுணர்குழு இன்று வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடர்ச்சியாக ஒன்று கூடி தீர்வுத்திட்ட இறுதி வரைபை எதிர்வரும் சில நாட்களில் தயாரித்து முடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் தீர்வு திட்ட இறுதி வரைபானது சர்வதேசத்திடமும், தமிழ் அரசியல் தலைவர்களிடமும் கையளிக்கப்படவுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையானது ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்களில் முக்கியமான வேலைத்திட்டத்தை நிறைவேற்றி தனது அடுத்த கட்ட நகர்வுக்கு ஆயத்தமாகி வருவதாகவும், இதற்கு தமிழ் மக்கள் முழு ஆதவையும் வழங்க வேண்டும் எனவும் அந்த பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Posts