தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர்குழு இன்று கூடுகிறது

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு சம்பந்தமான மக்கள் கருத்தறியும் செயற்திட்டம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து நிபுணர் குழுவானது இன்று முதல் மீண்டும் ஒன்று கூடித் தீர்வுத்திட்ட இறுதி வரைபை தயாரிக்கும் பணியில் ஈடுபடவுள்ளது.

இப் பணியானது எதிர்வரும் நாட்களில் முடிவுறும். பேரவையின் தீர்வுத்திட்ட வரைபுக்கு தமிழ் மக்கள் பெருமளவில் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்திருக்கும் இவ்வேளையில், அவற்றை பகுத்தாய்ந்து, உள்வாங்கி இறுதி தீர்வுத்திட்ட முன் மொழிவு தயாரிக்கப்படவுள்ளது.

மிகவிரைவில் வெளியாகவிருக்கும் தீர்வுத்திட்டத்தின் இறுதி முன்மொழிவானது வரலாற்றில் முதற் தடைவையாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், கொழும்பு வாழ் தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பங்குபற்றுவதற்கான சகலவிதமான சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டு, மக்களின் காத்திரமான கருத்துக்கள், ஆலோசனைகள் பெறப்பட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் இறுதி வடிவம் பெறவுள்ள இவ் முன் மொழிவு மிகவிரைவில் சர்வதேசத்திடமும், தமிழ்த் தலைமைகளிடமும் கையளிக்கப்படவுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையானது ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்களில் வரலாற்றில் மிகவும் முக்கியமான வேலைத்திட்டத்தை நிறைவேற்றி தனது அடுத்தக்கட்ட நகர் வுக்கு ஆயத்தமாகிவரும் இவ் வேளையில்,
தமிழ் மக்களின் முழு ஆதரவை மிகவும் உரிமையுடன் தமிழ் மக்கள் பேரவை வேண்டி நிற்பதுடன், தீர்வு யோசனைகளின் இறுதிவரைபு வெளிவருகையில் அது முதன் முதலாக தமிழ் மக்களின் பங்களிப்புடன் கூடிய ஜனநாயக பூர்வமான ஒரு முன்வைப்பாக இருக்கும் என தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழு வினர் அறிவித்துள்ளனர்.

Related Posts