தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு நோர்வே துாதுவரிடம் கையளிப்பு

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு நேற்று செவ்வாய்கிழமை நோர்வே அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பேரவையின் செயற்பாட்டுக்குழு இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினரான சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் ஸ்ரீலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஷொபியொன் கோஸ்டாட்செசரிடம் இதனை கையளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பேரவை உறுப்பினர்களுக்கும் நோர்வே தூதுவர் அடங்கிய குழுவிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழ் மக்களுக்கான ஒரு கொளரவமான இறுதித்தீர்வை பெற்றுத்தரவும், மனித படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தார்மீகப் பொறுப்பு நோர்வேக்கு உள்ளதாக வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் தமிழ் மக்கள் பேரவையினர் மிகவிரைவில் ஆரம்பிக்கவுள்ள சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய கோரிக்கைக்கு நோர்வே அரசாங்கம் தமிழ் மக்கள் பக்கம் சார்ந்து குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த நோர்வே துணைத்தூதுவர், உள்ளக விசாரணையில் எவ்வாறு நடு நிலையான சர்வதேச நீதிபதிகளை உள்வாங்குவது முக்கியமென்பதில் நோர்வே அரசு மிகவும் கரிசனையாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் தமிழ் மக்களின் இழப்புக்கான நீதி தேடலில் நோர்வேயின் பங்கு இருக்குமெனவும் ஸ்ரீலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஷொபியொன் கோஸ்டாட்செசர் தெரிவித்தார்.

Related Posts