தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு இந்திய அரசிடம் கையளிப்பு

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டு அது நேற்று உத்தியோகபூர்வமாக இந்திய அரசிடம் கையளிக்கப்பட்டது.

tttt

பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய நிபுணர் பூ.லக்ஸ்மன் தலமையில் பேரவையின் செயற்பாட்டுக்குழு உறுப்பினர்கள், மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினர்கள் அடங்கிய ஐவர் கொண்ட குழு நேற்று (27.04.2016) மதியம் 2.30 மணியளவில் யாழ் நகரில் உள்ள இந்திய துணைத்தூதுவராலயத்தின் துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் அவர்களிடம் நேரடியாக கையளித்தனர்.

இதனைத்தொடர்ந்து பேரவை உறுப்பினர்களுக்கும் இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் அவர்களிற்கும் இடையிலான ஒரு மிக முக்கிய சந்திப்பும் நடைபெற்றது.

Related Posts