தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பை நிராகரித்தார் சிவா பசுபதி!

தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சட்ட ஆலோசகரும் சட்ட வல்லுநருமான சிவா பசுபதி நிராகரித்து விட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Siva Pasupathy

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிவா பசுபதி கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். அப்போது அவரை வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்தார்.

இதன்போது தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிக்குமாறு சிவா பசுபதிக்கு முதலமைச்சர் சி.வி.விக்ரனேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார். எனினும் அவரின் கோரிக்கையை சிவா பசுபதி நிராகரித்து விட்டார் எனத் தெரிகின்றது.

Related Posts