தமிழ் மக்கள் பேரவைத் தீர்வுத் திட்டம் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையளிப்பு!

தமிழ் மக்கள் பேரவையின் இறுதித் தீர்வுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோக பூர்வமாக பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

download-29

இந்த இறுதித்திட்ட வரைபை தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாட்டுக்குழு இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் தலைமையில் அரசியல் உபகுழு இணைப்பாளர் புவிதரன் மற்றும் அரசியல் குழு உறுப்பினர்களான இரத்தினவேல், விஜயகுமார் மற்றும் காண்டீபன் ஆகிய ஐந்துபேரைக் கொண்ட குழு நேற்று காலை ஐரோப்பிய ஒன்றிய அரசியல் விவகாரப் பொறுப்பாளர் போல் கொட்விரியிடமும், பிரித்தானிய தூதுவராலய அரசியல் பொறுப்பாளர் டானியல் பெயின்டரிடமும் நேரடியாகச் சென்று கையளித்துள்ளனர்.

இதனையடுத்து தமிழ் மக்கள் பேரவையின் குழுவினருக்கும், அரசியல் இராஜதந்திரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதில் தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்ட குழுவினர் அரசியல் இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்துள்ளனர்.

Related Posts