தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் என்ன?- மஹிந்தவிடம் விளக்கம் கோரும் சி.வி.கே.

தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெளிவுபடுத்த வேண்டும் என, வட. மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார்.

தமது ஆட்சியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே குழப்பியது என மஹிந்த குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் மஹிந்தவின் இக்கருத்து தொடர்பாக வட. மாகாண சபைத் தலைவரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்போவதாக மஹிந்த தொடர்ந்தும் கூச்சலெழுப்பி வருகிறார். ஆனால், வழங்கக்கூடிய தீர்வுத் திட்டம் என்ன என்பதை அவர் இதுவரை கூறியதில்லை. எனவே இது தொடர்பாக அவர் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் சி.வி.கே. மேலும் குறிப்பிட்டார்.

Related Posts