தமிழ் மக்களின் விருப்பத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் – சுரேஸ்

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் விருப்பத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து திங்கட்கிழமைவவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐ.நாவில் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டும்“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts