தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத்தர முடியும்’ என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உறுதியளித்ததாக வடமாகாண பிரஜைகள் குழு தெரிவித்தது.
இன்று செவ்வாய்க்கிழமை யாழில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் வடமாகாண பிரஜைகள் குழுவைச் சந்தித்து கலந்துரையாடும் போதே, அவர் மேற்கண்ட உறுதியினை வழங்கியதாக பிரஜைகள் குழு தெரிவித்தது.
குறிப்பாக யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் இடம்பெற்று வரும் காணி சுவீகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், காணாமல் போனோர் விவகாரம், தமிழ் கைதிகளின் விடுதலை மற்றும் உயர் பாதுகாப்பு வலயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நவநீதம்பிள்ளைக்கு விளக்கமளிக்கப்பட்டதாக பிரஜைகள் குழு சுட்டிக்காட்டியது.
இப்பிரச்சினைகளை செவிமடுத்த அவர், ‘இவை தொடர்பில் நான் நன்கு அறிந்து வைத்திருக்கிறேன். இவை குறித்து சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வைப் பெற்றுத்தருவேன்’ என்று உறுதியளித்துள்ளார் என்று பிரஜைகள் குழு சுட்டிக்காட்டியது.