தமிழ் பொலிஸ் இல்லாத காரணத்தால் அவசர முறைபாடுகளை பதிவு செய்வதில் சிரமம்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் போதிய தமிழ் பொலிஸார் இல்லாத காரணத்தால் அவசர முறைபாடுகளை பதிவு செய்வது சிரமமாக காணப்படுகிறது என பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் பொது மக்கள் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் போதிய தமிழ் பொலிஸார் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு செல்கின்ற பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை பல்வேறு முறைப்பாடுகளை செய்யும் பொருட்டு பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காவல் நின்றே தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இதனை விட இரவு வேளைகளிலும், பகல் வேளைகளிலும் அவசர தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு நிலைய தொலைபேசிகளுக்கு தகவல்களை வழங்க முயற்சிக்கும் போது, அங்கு தமிழ் மொழி அல்லது ஆங்கில மொழி தெரிந்த பொலிஸார் எவரும் கடமையில் இருப்பதில்லை.

இதனால் அவசர முறைப்பாடுகள் அல்லது குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்ளை உடனடியாக வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது எனதெரிவித்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள் இலகுவாக சேவைகளைப் பெறக்கூடிய வகையில் போதிய தமிழ் பொலிஸார் நியமிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts