தமிழ் பேசும் மக்களுக்கு புதிய தொலைக்காட்சி அலைவரிசை

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, நாட்டின் 25 வீத தமிழ் பேசும் மக்களுக்காக புதிய தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

தேசிய தொலைக்காட்சியான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 3ஆவது அலைவரிசையாக ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த அலைவரிசை ”நல்லிணக்க அலைவரிசை” என்ற பெயரில் தனது சேவையை வழங்கவுள்ளது.

இந்த அலைவரிசைக்காக நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து 180 மில்லியன் ரூபா நிதியையும், புதிய அலைவரிசை (frequency) ஒன்றையும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.

இந்த அலைவரிசை ஆரம்பிப்பது தொடர்பில் நல்லிணக்க அமைச்சுக்கும், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான கயாந்த கருணாதிலக்க, மனோ கணேசன், ரவி கருநாயக்ககருணாநாயக்க , ரஞ்சித் சியாலம்பிட்டிய, பிரதியமைச்சா்களான அஜித் பெரேரா, கருணாரத்ன பரணவிதாரண, ஆகியோருடன் தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானஜோதியும் கலந்துகொண்டனர்.

Related Posts