அரசியலை மறந்து சிங்கள மொழி ஆற்றல் விருத்தியை மேற்படுத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள மாணவர்கள் கட்டாயமாக தமிழ் மொழியினை கற்க முன்வந்துள்ளனர். விரைவில் தமிழ் பேசும் சிங்கள அலுவலகர்கள் வட, கிழக்கு மாகாணங்களுக்கு வர இருக்கின்றனர். அதனால் முன்னெச்சரிக்கையாக வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பேசும் அலுவலகர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ் பேசும் அலுவலகர்கள் சிங்கள அறிவு இல்லையெனில் புறக்கணிக்கப்படக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கல்வி தெய்வமான கலைமகள் திருவுருவச்சிலை திறப்பு நிகழ்வpல் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை வாழ் மக்களிடையே ஐயம், சந்தேகம், மனகிரேசம், அவநம்பிக்கைம் ஆத்திரம் போன்றவை ஒரு தவறான புரிதல் ஆகும். இரு மொழி பேசுகின்ற மக்களுடையே நல்லிணக்க புரிந்துணர்வு ஏற்படுமானால் ஒருவர் மொழியினை மற்றவர்கள் கற்க வேண்டும் நோர்வே, பிரான்ஸ் ஆகிய நாட்டவர்கள் எம் இலங்கை நாட்டு மொழியினை கற்கின்றார்கள். ஆனால் தமிழ் மக்கள் சிங்கள மொழியினை புறக்கணிக்கின்றார்கள்.
நான் சிங்கள மொழியினை கற்றது 1955ம் ஆண்டில், அதில் இருந்து 1956ம் ஆண்டு சட்டம் சிங்களம் மொழியிலே வந்தால் நான் ஆத்திரத்திலே சிங்கள மொழியினை படிப்பதை நிறுத்தி விட்டேன்.நான் அன்று சிங்கள மொழியினை நிறுத்தாமல் கற்றிருந்தால் சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் நான் சுடச்சுட கருத்துக்களை தெரிவித்திருக்கலாம், என்றார்.