சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கூடியது.
இதன் போது நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த அர்ச்சனா செல்லத்துரை, சபை நடவடிக்கைககளை பார்வையிட்டார்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட அர்ச்சனா செல்லத்துரை சிறந்த பாடகியும் ஆவார். டென்மார்க்கில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.