தமிழ் பாடசாலைகளை முன்னேற்றுவது தொடர்பில் இந்தியாவில் கலந்துரையாடல்

இலங்கையில் தமிழ்மொழிமூல பாடசாலைகளுக்கு இலவச நூல்களை வழங்குதல் மற்றும் இலங்கை, இந்திய, மலேசிய கல்வி அமைச்சுக்களின் ஊடாக ஆசிரியர் பரிமாற்றங்களை செய்து ஆசிரியர் பயிற்சிகளை வழங்குதல் ஆகிய செயற்திட்டங்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில், தமிழக அரசாங்கத்தின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் இலங்கை கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மற்றும் மலேசிய கல்வி அமைச்சின் துணை உயர்கல்வி அமைச்சர் கமலநாதன் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன்போது இலங்கை, இந்திய, மலேசிய நாடுகளின் ஒத்துழைப்புடன் இத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கலந்துரையாடலில் தமிழக பள்ளிக் கல்விதுறை அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts