தமிழ் நாடு பெரம்பலூாில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2016ம் ஆண்டுக்கான புத்தகத்திருவிழா ஜனவரி 29 ம் தேதி தொடங்கி பிப்ரவாி 7 ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் சிறப்பம்சமாக வெளிநாட்டுவாழ் தமிழா்களின் புத்தகங்களை வைத்து விற்பதற்கான தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது.
இந்த அரங்கில். வெளிநாட்டில் வாழும் தமிழ் படைப்பாளிகள் தங்கள் புத்தகங்களை அனுப்பி வைத்தால், அவை தனி அரங்கில் வைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படும். வெளிநாட்டு வாழ் தமிழ் படைப்பாளிகள் குறித்து வாசகா்கள் அறிந்து கொள்ள ஏதுவாகும்.
இந்த அரங்கில் பெரம்பலூர் மாவட்ட படைப்பாளிகளின் படைப்பு நூல்களும் வைக்கப்பட்டு பெரம்பலூர் பகுதி எழுத்தாளா்களுக்கான கண்ணியமும் வழங்கப்படஉள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சோ்ந்த படைப்பாளிகளும் தங்கள் நூல்களை அனுப்பி வைக்கலாம் இதன் மூலம் பெரம்பலூர் மாவட்ட படைப்பாளிகள் தனி அடையாளம் பெறுவாா்கள். பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவா் தரேஸ் அகமது பெரம்பலூர் மாவட்ட எழுத்தாளா்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த வாய்ப்பை கொடுத்து உள்ளாா்.
எனவே. உலக அளவில் பரவி உள்ள தமிழ் எழுத்தாளா்களும், பெரம்பலூர் மாவட்ட எழுத்தாளா்களும் தங்களது படைப்பை அனுப்பித்தர கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். தங்களின் நண்பா்கள் படைப்பாளிகளாக இருக்கும்பட்சத்தல் அவர்களுக்கும் தகவல் தந்து அவர்களின் படைப்புகள் வாசகா்களை சென்றடைய உதவுங்கள் இந்த அரங்கிற்கு திரு.தாஹிர் பாட்சா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளாா்.எனவே அவரை உடன் தொடா்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திரு தாஹிர் பாட்சா தொடா்பு முகவரி :
edbatcha@yahoo.com
0091-9842491363
Address :
Mr.E.Dhahir Batcha
opp: Govt. Girl Hoster
Ghandi Nagar
Aumbavur Post 621 103
Perambalur Dist.
Tamil Nadu
South India