தமிழ் படங்களை மீண்டும் கலாய்க்க வரும் `தமிழ்படம் 2.0′

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ் படம்’. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது.

இந்த படத்தை தொடர்ந்து அமுதன் அடுத்ததாக `இரண்டாவது படம்’ என்ற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார். விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்டு, விஜயலக்‌ஷ்மி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் நடித்து வந்த இப்படம் சில பிரச்சனைகளால் ரிலீசாகாமல் உள்ளது.

இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் அமுதன் வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது, `தமிழ் படம் இரண்டாவது பாகம் 2.0′ விரைவில் உருவாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் இரண்டாவது பாகத்திலும் சிவாவே நடிக்க இருக்கிறார்.

சமீபத்தில் வெளியாகி வசூலை அள்ளி வரும் `விக்ரம் வேதா’ படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார்.

Related Posts