தமிழ் நாட்டில் கடும் வெப்பம் : இருவர் உயிரிழப்பு

தமிழ் நாட்டில் கடும் வெப்பத்தின் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி சந்தைக்கு அருகே வெப்பத்தை தாங்கமுடியாமல் 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.

இதேபோல் விழுப்புரத்தில்வீதியில் நடந்து சென்று 70 வயது முதியவரும் பலியாகியுள்ளார்.

உயிரிழந்த 2 பேரும் யார் என்பது குறித்து தமிழக பொலீசார் விசாரணைகளை நடத்தி வருவதாக இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Related Posts