புதிய அரசியலமைப்பு திருத்தத்தை தயாரித்தல் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்கர்களினால் புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்று நாட்டுக்கு அவசியம் இல்லை என்ற கருத்து தொடர்பில் தாம் அவர்களுடன் கலந்துரையாட இருப்பதாக கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை தோற்றுவிப்பதே தமிழ் மக்களின் அபிலாஷையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மகாநாயக்கர்களின் அந்த கூற்றை மீள ஆராயுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிககை விடுத்துள்ளது.