தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்பட வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்படவேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாக செயற்பட்டுள்ளது. இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts