தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும்போக்கு விஞ்ஞாபனத்தை முன்வைத்திருக்கிறது – விஜயகலா குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும்போக்கு ரீதியான தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் வேட்பு மனுவில் கடும்போக்கு ரீதியான கொள்கைகளே காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் யுத்த காலத்தில் தமிழ் மக்களை பாதுகாக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த வகையிலும் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related Posts