இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைக்குமென கூட்டமைப்பின் தலைவர் கூறுகின்றார். அதை நாங்களும் நம்புகின்றோம். தீர்வு கிடைக்காவிடினும், இனவாதம் பேசமால் எமது தீர்வுக்கான திட்டங்களை வடமாகாண சபை நடைமுறைப்படுத்த வேண்டுமென என வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் வலியுறுத்தியுள்ளார்.
வடமாகாண சபையின் 60 வது அமர்வு இன்றுநேற்று வியாழக்கிழமை நடைபெற்றது போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் 5 மாவட்டங்கள் இருக்கின்றன என அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். யாழ்ப்பாணம் மட்டும் ஒரு மாவட்டம் அல்ல. சில விடயங்களை முன்னெடுக்கும் போது, ஏனைய மாவட்டங்களையும் கருத்திற்கொண்டு வடமாகாண சபை செயற்பட வேண்டும்.
முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை வடமாகாண சபை கருத்திற்கொள்ள வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பவர்களும் ஏனையவர்களும் இனவாதம் பேசுகின்றார்கள். இனவாதம் பேசக் கூடாது. ஏனெனில், வட மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் நாம் 3 இனத்தவர்களாக இருக்கின்றோம்.
இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைக்குமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறுகின்றார். அதை நாங்களும் நம்புகின்றோம். சில நேரங்களில் அத் தீர்வு இல்லாமலும் போகலாம்.
எமது காணியில் இராணுவத்தினர் அணிவகுப்பில் ஈடுபடுகின்றார்கள். இவற்றினை எல்லாம் பார்க்கும் போது, எமது நிலமை கவலைக்கிடமாக இருக்கின்றது என்றார்.