தமிழ் தேசியத்தின் இறுதித் தலைவன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!!

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவானது, தமிழ் தேசியத்தின் இறுதித் தலைவன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்பதை வெளிக்காட்டி நிற்கின்றதென சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். கிட்டு பூங்காவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜீ.ஜீ.பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம் ஆகியோருக்கு பின்னர் தமிழ் தேசத்தை காப்பாற்ற வந்தவர் பிரபாகரன். அவருக்குப் பின்னர் கஜேந்திரகுமாரே தமிழ் தேசியத்தின் இறுதித் தலைவன் என்பதையும், அவராலேயே தமிழ் தேசத்தை மீட்க முடியுமென்றும் சுகாஸ் மேலும் குறிப்பிட்டார்.

அது நடைபெறாவிட்டால், ஒரே நாடு இரு தேசம் என்ற தமிழ் மக்களின் கொள்கை மாற்றப்பட்டு, ஒரே நாடு ஒரே தேசம் என்ற கொள்கை ஏற்பட்டுவிடும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழில் 84 பிரதேச சபை உறுப்பினர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளதாகவும், அடுத்த தேர்தலில் வடக்கு கிழக்கின் சகல மாவட்டங்களிலும் வெற்றிபெறுவோம் என்றும் குறிப்பிட்டார்.

Related Posts