தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட மக்கள் சந்திப்பு!

நிரந்தரத் தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் வகிபாகம்’ என்ற தலைப்பிலான மக்கள் சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்களை இலக்காகக் கொண்டு இச்சந்திப்பு நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வண்ணார்பண்ணை – பெரியகடை வட்டார வேட்பாளர் ம.அருள்குமரன் தலைமையில், நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

இச்சந்திப்பில், ‘நிரந்தரத் தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் வகிபாகம்’ என்ற தலைப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சிறப்புரையாற்றினார்.

அத்தோடு, வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிறீகாந்தா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் யாழ்.மாநகர சபை வேட்பாளருமான இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

Related Posts