தமிழ் சேனல்களில் ஆயுதபூஜை சிறப்பு திரைப்படங்கள்

நாளை (10ந் தேதி) ஆயுதபூஜையும், 11ந் தேதி சரஸ்வதி பூஜையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையட்டி தமிழ் சேனல்களில் புத்தம்புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது. இதில் ஹைலைட்டாக சூர்யா நடித்த புத்தம் புது திரைப்படமான 24 நாளை மாலை 6 மணிக்கு ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகிறது. 11ந் தேதி சரஸ்வதி பூஜையன்று மாலை 6 மணிக்கு இறைவி ஒளிபரப்பாகிறது.

24 படத்தில் சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடித்துள்ளனர். விக்ரம் குமார் இயக்கி உள்ளார், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார், திரு ஒளிப்பதிவு செய்துள்ளார், ஈராஸ் இண்டர்நேஷனலும், ஸ்டூடியோ கிரீனும் இணைந்து தயாரித்த இந்தப் படம் இந்த ஆண்டு மே மாதம் வெளிவந்தது. வெளியான 4 மாதங்களுக்குள் நாளை ஒளிபரப்பாகிறது.

ஜிகிர்தண்டா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் இ றைவி. திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்தார். விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, அஞ்சலி, பூஜா தேவரியா, கமலினி முகர்ஜி நடித்திக்கிறார்கள் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார், சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஜுன் மாதம் ஒளிபரப்பான படம் 4 மாதங்களுக்கு பிறகு சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது.

இதுதவிர ஜீ தமிழ் சேனலில் 10ந் தேதி காலை 11 மணிக்கு ராஜா மந்திரி படமும், 11ந் தேதி காலை 9 மணிக்கு கிருமி படமும், மாலை 3 மணிக்கு மாப்ளசிங்கம் படமும் ஒளிபரப்பாகிறது. விஜய் டி.வியில் 10ந் தேதி காலை 11மணிக்கு விசாரணை படமும், 11ந் தேதி காலை 11 மணிக்கு அம்மா கணக்கு படமும் ஒளிபரப்பாகிறது.

Related Posts