தமிழ் சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியற் கட்சிகள் இணைந்து ஐநா மனித உரிமை பேரவைக்கு அனுப்பிவைத்துள்ள கூட்டு மனு

தமிழ் சிவில் அமைப்புகள் , தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியற் கட்சிகள் இணைந்து ஐநா மனித உரிமை பேரவைக்கு இன்று அனுப்பிவைத்துள்ள கூட்டு மனுவின் தமிழ் வடிவம்..

இலங்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுக்கின்றது. ஐ.நா மனித உரிமைப் பேரவை உறுதியாகப் பதிலிறுப்பது அவசியம்.

தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற் சங்கங்களின், அரசியற் கட்சிகளின் கூட்டு விண்ணப்பம்
09 மார்ச் 2017

இலங்கையின் அனுசரணையுடன் ஐ. நா மனித உரிமை பேரவையில் 2015 அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட 30ஃ1 தீர்மானமானது, மனித உரிமைகள் அச்சுறுத்தலுக்குட்படுத்தப்பட்ட ஒரு நாட்டுடன் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை எவ்வாறு ஆக்கபூர்வமாக தொழிற்படுவது என்பதற்கு உதாரணமாக அமையக் கூடியது என அந்நேரத்தில் பரவலாகக் கருத்துரைக்கப்பட்டது. ஆனால், இலங்கை அரசாங்கத்தை, இப்பிரேரணையின் இணை அனுசரணையாளர் எனும் தளத்திற்கு கொண்டுவருவதற்காக, பிரேரணையின் உள்ளடக்கத்தில், உறுதியான சர்வதேச நியமங்களுக்கமைவான பொறுப்புக்கூறல், மற்றும் நீதிப்பொறிமுறைகளுக்கான அடித்தளமொன்றை இடுவதற்கான சந்தர்ப்பத்தை இழந்து, தெளிவற்ற வாசகங்களுடன் கூடிய கலப்பு நீதிப்பொறிமுறை ஒன்றிற்கு விட்டுக்கொடுப்பு செய்யப்பட்டு 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையின் கட்டமைப்புகள், உண்மையைக் கண்டறிந்து நீதியை வழங்குவதற்கான அரசியல் விருப்பை கொண்டிராதமையால், இலங்கை அரசாங்கத்தின் உள்ளக நிர்வாகக்கட்டுப்பாட்டின் கீழ் அமைகின்ற எந்தவொரு கலப்புபொறிமுறையும் எமக்கான நீதியைப் பெற்றுத் தராது என நாம் அப்போதே குறிப்பிட்டிருந்தோம். குறிப்பாக, ஐநா மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானம் நிறைவேற்றபபட்ட பின்பு இலங்கை நீதித்துறையால் வழங்கப்பட்ட குமாரபுரம் மற்றும் அமரர் ரவிராஜ் வழக்குகளின் தீர்ப்புகள், இலங்கை நீதித்துறையில் ஆழமாக வேரூன்றியிருக்கின்ற, குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக இருக்கும் பட்சத்தில், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழமையை உறுதிப்படுத்துகின்றன. அத்தோடு, உண்மையான பொறுப்புக் கூறலில் அரசியல் விருப்பில்லாத இலங்கையின் கட்டமைப்புகளுள், சில வெளிநாட்டு நீதிபதிகளை மட்டும் சேர்த்துக் கொள்வதன் மூலம் மட்டும் பொறுப்புக்கூறல் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்பதனை இது வெளிக்காட்டி நின்றது.

ஆயினும், ஐநா மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்தின் மூலம் பொறுப்புக்கூறலிற்காக (இலங்கை அரசினால்) ஒத்துக்கொள்ளப்பட்ட ஆகக்குறைந்த கடப்பாடுகளிலிருந்து கூட தற்போது இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முழுமையான விலகியுள்ளது. தாமே இணை அனுசரணையாளர்களாக இருந்து நிறைவேற்றிய, ஐநா மனித உரிமைபேரவையின் 30/1 தீர்மானம், குறிப்பாக நிறைவேற்றுப்பந்தி 6 இல் குறிக்கப்பட்ட கடப்பாடுகள் (வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கடப்பாடுகள்), எந்த வகையிலும் தம்மை கட்டுப்படுத்தாது என இலங்கை அரசாங்கம், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாளிலிருந்தே தொடர்ச்சியாக பலதடவைகள் எண்ணத்திலும் செயற்பாட்டிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த கடப்பாடுகள் தம்மைக் கட்டுப்படுத்த மாட்டாதவை என காட்டும் செயற்பாடுகளுக்கு இலங்கை சனாதிபதி அவர்களே தலைமைதாங்குகிறார். மிகக்குறைந்தளவான கலப்பு பொறிமுறையை பரிந்துரை செய்திருந்த இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான கலந்தாய்வுச் செயலணியின் அறிக்கையை நேரடியாகப்பெற்றுக் கொள்வதைக் கூட இலங்கை சனாதிபதியும் பிரதமரும் தவிர்த்திருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில், 28.02.17 அன்று உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் திரு மங்கள சமரவீரவின் உரையானது, வெற்றுவார்த்தைகளால் புனையப்பட்டதும், இலங்கை அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டுடன் எந்தவித தொடர்பற்றதென்பதோடு, அடிப்படையில் அனைவரையும் பிழையாக வழிநடத்துகின்ற ஒன்றாகும்.

இலங்கை அரசாங்கமானது, 30/1 தீர்மானத்தின் 06ம் செயற்பாட்டு பந்தியில் குறிப்பிடப்பட்டவற்றை மட்டுமல்லாது, அத்தீர்மானத்திலிலுள்ள வேறு பல கடப்பாடுகளையும் நிறைவேற்றத் தவறியுள்ளது. உதாரணமாக:-

1) கணிசமான எண்ணிகையான அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளைல் அடைக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட சிலர் கூட, இலங்கை ஆயுதப்படைகளால் நிர்வகிக்கப்படும், ஈவிரக்கமற்ற சித்திரவதைகளுடன் கூடிய மனிதத்துவமற்ற தரம் தாழ்த்தும் கொடூரமான ‘புனர்வாழ்வு’ முகாம்களுக்கென அனுப்பப்படுகின்றனர். இவற்றிலிருந்தெல்லாம் விடுவிக்கப்பட்டவர்களும் கூட கடுமையான கண்காணிப்பு மற்றும் தொடர்ச்சியான தொந்தரவுகளிற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

2) இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 1/5 நிலங்கள் கூட இன்னும் விடுவிக்கப்படவில்லை. சில காணிகள் (ஆக்கிரமிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அப்பகுதியிலிருந்த இராணுவம், அருகிலிருக்கும் நிலப்பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளதே தவிர, இராணுவமயாமக்கலை நீக்கி, முழுமையான மீள்குடியமர்வுக்கான ஒரு சூழலை உருவாக்கவில்லை. இராணுவநீக்கம் இல்லாத காணி விடுவிப்புகள், இயல்புநிலை உருவாக்கத்துக்கு முட்டுக்கட்டையாகவே தொடர்நது இருக்கின்றன. இதைவிட, பெருமளவிலான நிலப்பகுதிகள் தற்போதும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதோடு, வெவ்வேறு முகமூடிகளோடு, தற்போதைய அரசின் கீழும் சிறிலஙகா இராணுவத்தால் காணி அபகரிப்பு தொடர்கிறது. வடக்கு கிழக்கில் இராணுவக் குறைப்பு செய்யப்படவில்லை என இலங்கை அரசாங்கம் தானே ஒத்துக்கொண்டு அறிவித்துமுள்ளது.

3) காணாமல் போனோருக்கான அலுவலகம், தனது அடிப்படையில் பிழையான நடைமுறைகளுடனேனும், நடைமுறைச்செயற்பாட்டிற்கு வராது, இன்னமும் எழுத்துவடிவிலேயே இருக்கிறது.

4) வடக்கு கிழக்கு மக்களின் பொதுவாழ்க்கை மீதான இராணுவ மற்றும் பொலிஸ் கண்காணிப்பு, இந்த அரசாங்கத்திலும் தொடர்கிறது ஆதலால், தற்போதைய ‘இயல்பு நிலை’ எனும் தோற்றப்பாட்டை பயன்படுத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்கள், தற்போதைய சூழ்நிலை எதிர்காலத்தில் மோசமடையும் பட்சத்தில், அரசாங்கத்தினால் தாம் இலக்குவைக்கப்படக்கூடும் என அஞ்சுகின்றனர். 2001-2004 சமாதான செயன்முறைகள் குலைவடைந்த போதும் செயற்பாட்டாளார்கள் இவ்வாறாகவே குறி வைத்துக் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசு ‘உண்மையைக் கண்டறிதலை’ முன்னிறுத்தி குற்றவியல் நீதியை, அல்லது நீதியை புறந்தள்ள முயற்சிப்பது தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டுள்ளோம். ஆனால் இப்போது இவை இரண்டையுமே பின்தள்ளி அரசியலமைப்பாக்கத்தை முன்னிறுத்தி நீதி, உண்மையைக் கண்டறிதல் ஆகிய இரண்டையும் பிற்போட வேண்டும் என அரசாங்கம் கூறுகின்றது. புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையை முன்னிறுத்தி உண்மையையும், நீதியையும், பொறுப்புக்கூறலையும் புறந்தள்ளுதல் காலத்தை இழுத்தடிக்கும் செயலாக நாம் கருதுகிறோம். நீதியும் சமாதானமும் (நிரந்தரத் தீர்வும்), இருவேறான தூண்கள் அல்ல. அவை இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டது. சமாதானத்தை முன்னிறுத்தி நீதியை புறந்தள்ளல் அரசியலமைப்பாக்க முயற்சியின் நேர்மைத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது. சமாதானத்தையும், நீதியையும் இருதுருவங்களாக அரசாங்கம் அணுகுவது அபாயகரமானதும் இவ்விரண்டிலும் அரசாங்கத்திற்கு அரசியல் விருப்பமில்லை என்பதனை வெளிப்படுத்தி நிற்கின்றது. எது எவ்வாறாயிருப்பினும் அரசியலமைப்பு முயற்சிகளில் பெரிதளவில் முன்னேற்றங்கள் இல்லை என்பதே உண்மை. அரசியலமைப்பாக்க சபையின் வழிகாட்டும் குழு தன்னுடைய இடைக்கால அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இவ்வறிக்கையை அரசாங்கத்தின் ஓர் பகுதியினரே தடுத்து வைத்துள்ளனர். இது புதிய அரசியல் திட்ட செயன்முறையில் இடையூறு ஏற்பட்டுவிட்டதை சுட்டி நிற்கின்றது. புதிய அரசியலமைப்புத் திட்டம் தொடர்பிலான உரையாடல் இலங்கையின் ஒற்றையாட்சி முறையை கேள்விக்குட்படுத்தவில்லை. முன்னரைப் போல சிங்கள-பொளத்த மேலாதிக்கவாதம் தொடர்ந்தும் பேணப்படும் என்று பொது வெளியில் தெற்கின் அரசியல்வாதிகள் உறுதிப்படுத்துகிறார்கள். தமிழ் மக்கள் மீத புதிய அரசியல் திட்டம் எனும் வெற்று வெறிதான நம்பிக்கைக்குப் பதிலாக பொறுப்புக்கூறலை கைவிடுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. இறுதியில் அரசியல் தீர்வும் இல்லை நீதியும் இல்லை எனும் நிலைப்பாட்டிற்கே இது இட்டுச் செல்லும்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 30/1 என்பது இலங்கைவின் மீதான சர்வதேச சமூகத்தின் பார்வையை திசை திருப்புவதற்காக என்பது மேற்சொன்னவற்றில் இருந்து தெளிவாகின்றது. கடுமையான நடவடிக்கையில் இருந்து இலங்கையை பாதுகாத்துக் கொள்வதற்கே இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தற்போது சிரேஸ்ட அமைச்சர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். எனவே அரசாங்கத்தைப் பொறுத்த வரை மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் அவர்களின் சாணக்கியமான வெளியுறவு கொள்கை உத்தியின் ஓர் அங்கமே அன்றி வேறொன்றுமில்லை.

ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 30/1க்கு பின்னரான இலங்கை அரசின் நடவடிக்கைகள் ஐ.நா மனித உரிமை பேரவையின் நம்பகத்தமையை கேள்விக்குட்படுத்துகின்றது. கலப்பு நீதிமன்ற முறை இலங்கைவின் இறையாண்மையை பாதிக்குமென்று கூறி இலங்கை அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றாது தட்டிக்கழித்து வந்திருக்கின்றது என்பது ஐ.நா செயன்முறையோடு நாம் ஒத்துழைத்துப் போக விரும்புகிறோம் என்ற அரசின் பொய்யான வேடத்தை அம்பலப்படுத்துகின்றது. அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முன்னர் ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில், எவ்வளவு தூரம் தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பதை கணிக்கவேண்டிய கடப்பாடு ஐ.நா மனித உரிமை பேரவைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் உண்டு. தமிழ் மக்களின் கணிப்பின்படி இலங்கை அரசு பாதிக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்து செயற்பட அரசியல் விருப்பற்று அதே நேரத்தில் சர்வதேச தளத்தில் அவ்வரசியல் விருப்பு உள்ளது போல் காட்டிக்கொள்ள முயல்கின்றது. மீண்டும் அதே தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கு நேர அவகாசம் வழங்கக் கொண்டு வரப்படும் தீர்மானமானது ஏமாற்றுத் தன்மையானது. ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்ட்ட தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டேன் என ஓர் அரசு தெளிவாக சொல்லுமிடத்து அவர்களுக்கு அதே தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் வழங்குவது ஐ.நா உரிமை பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும். அவ்வாறு கால அவாசகம் வழங்குதல் நீதிக்கான தேடலை நீர்த்துப் போகச் செய்யும். வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள் சுயாதீனமான சர்வதேச விசாரணையை வலுயுறுத்தி வந்துள்ளனர், தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இலங்கை அரசு கலப்பு நீதிமன்ற முறையை நிராகரித்தமையானது உள்நாட்டில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை இன்னும் சாத்தியமற்றதாக்கின்றது. தமிழ் மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்கவேண்டுமெனில் இலங்கை அரசு இழைத்த பாரிய குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க தனியான சர்வதேச தீர்ப்பாயம் அமைக்கப்படவேண்டும். அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும். இது தொடர்பில் முன்னெடுப்புக்களை முடுக்கிவிடுதல் ஐ.நா அமைப்பின் கடமையாகும். அதுவரைக்கும் ஐ.நா மனித உரிமை மீறல்களை கண்காணிக்க மனித உரிமை செயலாளர் நாயகம் அவர்களின் அலுவலகங்கள் வடக்கு-கிழக்கில் உருவாக்குதல் அவசியமாகின்றது.

இலங்கை அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற அதன் மீது கடுமையான அழுத்தமே இன்றைய தேவை. அழுத்தத்தைக் குறைப்பது அரசு தனது வாக்குறுதிகளைத் தொடர்நது செயலிழக்க வைக்க ஊக்குவிக்கும். அவ்வாறான நேர்மையான சர்வதேச அழுத்தம் தான் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீதான உரிமை மீறலைக் குறைப்பதற்கு சர்வதேச சமூகம் எடுக்கக் கூடிய குறைந்த பட்ச நடவடிக்கையாகும். இக்கோரிக்கை சர்வதேச சமூகம் இலங்கை தொடர்பில், இங்கு நிலவும் மனித உரிமை சூழல் தொடர்பான அரசியல் கணிப்பிற்கு முரண்பட்டதாக இருக்கலாம். ஆனால் வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் அனுபவ வாயிலாக கண்டுகொண்ட, நாளாந்தம் அனுபவிக்கும் யதார்த்தத்தையே நாம் இவ்விண்ணப்பத்தில் வெளிப்படுத்துகின்றோம். இலங்கை அரசு ஒருபோதும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நம்பகத்தன்மையான பொறிமுறைகளை வழங்காது என்பது மீண்டும் உறுதியாகியுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதாயின் இவ்விண்ணப்பத்தில் சொல்லப்பட்டுள்ளவையே தீர்வாகும் என நாம் கருதுகிறோம்.

ஓப்பமிடும் சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற் சங்கங்கள்

மக்கள் அமைப்புகள்

தமிழ் மக்கள் பேரவை,
தமிழ் சிவில் சமூகம்,
தமிழ் சட்டத்தரணிகள் சங்கம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம்,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞானபீட ஆசிரியர் சங்கம்,
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம்,
வலிந்து காணாமற் போனவர்களின் குடும்பங்கள் சங்கம்,
மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையம்
மனித உரிமை பாதுகாப்புக்கும் மேம்பாட்டுக்குமான நிலையம் திருகோணமலை
இலங்கை ஆசிரியர் சங்கம்,
இணையம் – மட்டக்களப்பு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒன்றியம்
நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழு – யாழ் மறை மாவட்டம்
யாழ் பொருளியலாளர் சங்கம்
இந்து இளைஞர் பேரவை மட்டக்களப்பு
நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழு, யாழ்ப்பாணம்
மன்னார் பிரஜைகள் குழு
மீனவர் சங்கங்களின் சமாசம் முல்லைத்தீவு
கிராமிய உழைப்பாளர் சங்கம் யாழ்ப்பாணம்
சுயம் மகளிர் அமையம்,
மாற்றத்துக்கான நிலையம், மட்டக்களப்பு
கத்தோலிக்க இளைஞர் சம்மேளனம், யாழ்ப்பாணம்
யாழ் ஊடக அமையம்
யாழ் மாவட்ட கடற்றொழிலாளார் சம்மேளனம
வடமராட்சி கடலோடிகள் ஐக்கிய சமூக சேவைகள் அமைப்பு

அரசியல் கட்சிகள்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்)
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி

நாடாளுமன்ற, வடமாகாண சபை உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நீதியரசர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் (இணைத் தலைவர் – தமிழ் மக்கள் பேரவை)
கௌரவ சிவசக்தி ஆனந்தன் (நாடாளுமன்ற உறுப்பினர்)
கௌரவ செல்வம் அடைக்கலநாதன் (நாடாளுமன்ற உறுப்பினர்)
கௌரவ த.சித்தார்த்தன் (நாடாளுமன்ற உறுப்பினர்)
கௌரவ கோடிஸ்வரன் (நாடாளுமன்ற உறுப்பினர்)
திரு.க.சுரேஸ் பிரேமச்சந்திரன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் – செயலாளர் ஈ.பி.ஆர்.எல்.எப்)
திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தலைவர் – த.தே.ம.மு)
பேராசிரியர். சி.க.சிற்றம்பலம் (வரலாற்றுத்துறை யாழ்.பல்கலைக்கழகம் /சிரேஷ்ட உப தலைவர் தமிழரசுக்கட்சி
கௌரவ பொ.ஐங்கரநேசன் (விவசாய அமைச்சர் வடமாகாண சபை)
கௌரவ பா. டெனிஸ்வரன் (மீன்பிடி அமைச்சர் – வடமாகாண சபை)
கௌரவ பா.கஜதீபன் (வடமாகாணசபை உறுப்பினர்)
கௌரவ விந்தன் கனகரத்தினம் (வடமாகாணசபை உறுப்பினர்)
கௌரவ க.சர்வேஸ்வரன் (வடமாகாணசபை உறுப்பினர்)
கௌரவ க.சிவநேசன் (வடமாகாணசபை உறுப்பினர்)
கௌரவ ஆ.புவனேஸ்வரன் (வடமாகாணசபை உறுப்பினர்)
கௌரவ செ.மயூரன் (வடமாகாணசபை உறுப்பினர்)
கௌரவ க.சிவாஜிலிங்கம் (வடமாகாணசபை உறுப்பினர்)
கௌரவ வைத்தியகலாநிதி ஞா.குணசீலன் (வடமாகாணசபை உறுப்பினர்)
கௌரவ சு.பசுபதிப்பிள்ளை (வடமாகாணசபை உறுப்பினர்)
கௌரவ. ப.அரியரத்தினம் (வடமாகாணசபை உறுப்பினர்)
கௌரவ து.ரவிகரன் (வடமாகாணசபை உறுப்பினர்)
கௌரவ இ. இந்திரராஜா (வடமாகாணசபை உறுப்பினர்)
கௌரவ த. தியாகராஜா (வடமாகாணசபை உறுப்பினர்)
கௌரவ இரா.துரைரட்ணம் (கிழக்கு மாகாணசபை உறுப்பினர்)
திருமதி பத்மினி சிதம்பரநாதன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)
திரு.செ.கஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

மதகுருமார்கள்

வணபிதா இ.ரவிச்சந்திரன்
வணபிதா மங்களராஜா
வணபிதா செல்வநாதன் செல்வன்
வணபிதா எழில்ராஜன்
வணபிதா: திருமகான்
வணபிதா:ஹான்ஸ்பொவர்
வணபிதா: லூயிஸ் பொன்னையா
வணபிதா:ரவிகாந்தன் சி எம் எஃப்
வணபிதா: லியோ ஆம்ஸ்ரோங்
வணபிதா: புனிதகுமார்
வணபிதா: அன்ரன் அருள்தாசன்
வணபிதா:ஏ.ஜே. ஜெயசீலன்
வணபிதா: எம் டேவிட்
வணபிதா: வசந்தராஜா அ.ம.தி
வணபிதா: ஜஸ்ரின் ஆர்தர்
வணபிதா: ஜே.சி பாஸ்கரன்
வணபிதா:ஜாவிஸ்
வணபிதா:சுரேந்திரன் ரவேல்
வணபிதா:அ.அகஸ்ரின்
வணபிதா அமலராஜ்
வணபிதா வசந்தன் விமலசேகர்
வணபிதா அனந்தகுமார்

சமூக செயற்பாட்டாளர்கள்
திரு.ரி.வசந்தராஜா- இணைத்தலைவர் , தமிழ் மக்கள் பேரவை
திரு.எஸ்.சோமசுந்தரம்- செயற்பாட்டாளர்,
திரு.இன்பநாயகம் (கிராமிய உழைப்பாளர் சங்கம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் – வடமாகாண ஒருங்கிணைப்பாளர்)
திரு. அ. சந்தியாபிள்ளை (சமூக செயற்ப்பாட்டாளர்)
திருமதி .சரோஜா சிவச்சந்திரன்( இயக்குனர்- மகளிர் அபிவிருத்தி நிறுவனம்-பெண்ணிய செயற்பாட்டாளர்)
திரு.சி.சிவரூபன்- யாழ் பல்கலைக்கழகம்
திரு .செ.தவச்செல்வம் {தலைவர் -யாழ் மாவட்ட கடற்றொழிலாளார் சம்மேளனம்}
திரு. செ.சிவஞானராசா{யாழ் மாவட்ட கடற்றொழிலாளார் சம்மேளனம்- தலைவர் -மயிலிட்டி

மருத்துவ சமூகம்
வைத்தியாகலாநிதி கே.எ கருணாகரன் சிரேஷ்ட விரிவுரையாளர் (மருத்துவபீடம் கிழக்கு பல்கலைக்கழகம்)
வைத்தியகலாநிதி . முத்து முருகமூர்த்தி (பொதுவைத்திய நியுணர்}
வைத்திய கலாநிதி சு.பிறேமகிருஷ்ணா (உணர்வழியியல் சிகிச்சை நியுணர்)
வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் (இருதய சிகிச்சை நிபுணர், தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர்)
வைத்திய கலாநிதி க.சுரேஸ்குமார் (பெண் நோயியல் மகபேற்று வைத்திய நிபுணர்)
வைத்திய கலாநிதி க.இளங்கோஞானியர்
வைத்திய கலாநிதி சி.சிவன்சுதன் (பொது வைத்திய நிபுணர்)
வைத்திய கலாநிதி சி.குமரவேள்
வைத்திய கலாநிதி எஸ்.சிவபாலன்
வைத்திய கலாநிதி சி.யமுனாநந்தா
வைத்திய கலாநிதி தி.பாலமுருகன்
திரு குழந்தைவேல் நவநீதன் (தாதிய உத்தியோகத்தர் – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

சட்டத்தரணிகள் சமூகம்

திரு. கே.எஸ்.இரட்ணவேல் (சிரேஷ்ட சட்டத்தரணி)
திரு.வி.விவேகானந்தன் புவிதரன் (சிரேஷ்ட சட்டத்தரணி)
திரு.எஸ்.ஏ.ஜோதிலிங்கம் (சட்டத்தரணி)
திரு.நடராஜா காண்டீபன் (சட்டத்தரணி)
திரு. எஸ்.விஜகுமார் (சட்டத்தரணி)
திரு.கணேஸ்வரன் (சட்டத்தரணி)
திரு.எம்.கிறேசியன் (சட்டத்தரணி)
திரு.ஜி.அபின்மன்யு (சட்டத்தரணி)
திரு.வி.மணிவண்ணன் (சட்டத்தரணி)
திரு.ரி.அர்யூனா (சட்டத்தரணி)
திரு.கே.சுகாஸ் (சட்டத்தரணி)
திரு.பி.பார்த்தீபன் (சட்டத்தரணி)
திரு.வி.திருக்குமரன் (சட்டத்தரணி)
திரு.எஸ்.சோபிதன் (சட்டத்தரணி)
திரு.எஸ் என் . விஸ்வலிங்கம் (சிரேஷ்ட சட்டத்தரணி)
சிசிலியா ஜெயம்தேவி ராயப்பு (சட்டத்தரணி)
தக்க்ஷாமினி நவனாதன் (சட்டத்தரணி)
திருமதி . ரொபின்சா நக்கீரன் (சட்டத்தரணி)
கஸ்தூரி சாந்தகுமாரன் (சட்டத்தரணி)
பி. எம் சுலோஜன் (சட்டத்தரணி)
சின்னத்துரை ஜெகன் (சட்டத்தரணி)

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
1. திரு.எஸ். சிவகாந்தன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
2. திரு.எஸ். பாலபுத்திரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
3. திரு.கே. அருள்வேல் – சிரேஷ்ட விரிவுரையாளர்
4. கலாநிதி.என். கெங்காதரன் -சிரேஷ்ட விரிவுரையாளர்
5. திரு.ஜெ.ஷரூபின்சன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
6. திரு.பி. ஐங்கரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
7. திரு.பி.பிரகலாதன் – விரிவுரையாளர்
8. பேராசிரியர் . சரவணபவ ஐயர் – பேராசிரியர்
9. கலாநிதி. ஜெ. ராசநாயகம் – சிரேஷ்ட விரிவுரையாளர்
10. செல்வி.எஸ். அருளானந்தம் – சிரேஷ்ட விரிவுரையாளர்
11. திருமதி.பி. முரளீதரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
12. செல்வி.எஸ். காயத்திரி – விரிவுரையாளர்
13. கலாநிதி ராஜு உமேஷ் – சிரேஷ்ட விரிவுரையாளர்
14. செல்வி.கே. டிலோஜினி – விரிவுரையாளர்
15. கலாநிதி.எஸ்.சிறீகாந்தன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
16. பேராசிரியர் .எஸ். கிருஷ்ணராஜா ஸ்ரீ வரலாற்றுத்துறை பேராசிரியர்
17. செல்வி.எம்.சிவகுமார் – விரிவுரையாளர்
18. திரு.எஸ். உதயகுமார் – சிரேஷ்ட விரிவுரையாளர்
19. திரு.எஸ். கபிலன் – விரிவுரையாளர்
20. கலாநிதி.எஸ்.சந்திரசேகரம் – சிரேஷ்ட விரிவுரையாளர்
21. திரு.கே. சண்முகநாதன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
22. திரு. இ. குமரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
23. திரு.என். செல்வாம்பிகை – சிரேஷ்ட விரிவுரையாளர்
24. திரு. சாமிநாதன் விமல் – சிரேஷ்ட விரிவுரையாளர்
25. திருமதி.எஸ்.ராதிகா – விரிவுரையாளர்
26. செல்வி. ஜெ.மேனகா – விரிவுரையாளர்
27. கலாநிதி.கே.ரி.கணேசலிங்கம் – சிரேஷ்ட விரிவுரையாளர்
28. திரு.என். சிவகரன் – விரிவுரையாளர்
29. கலாநிதி வணபிதா போல் ரோஹன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
30. கலாநிதி. வீரமங்கை – சிரேஷ்ட விரிவுரையாளர்
31. திரு.எஸ்.பத்மநாதன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
32. கலாநிதி.எஸ்.சுகந்தினி – சிரேஷ்ட விரிவுரையாளர்
33. திரு.எஸ்.முகுந்தன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
34. திரு. எஸ்.திருச்செந்தூரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
35. திரு.பி.சந்திரசேகரம் – சிரேஷ்ட விரிவுரையாளர்
36. திரு.ரி. விக்னேஸ்வரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
37. திரு. என். தசரதன் – விரிவுரையாளர்
38. திருமதி.எஸ். உதயராசா – சிரேஷ்ட விரிவுரையாளர்
39. திருமதி. பி. விபுலன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
40. கலாநிதி எஸ்.கே. கண்ணதாஸ் – சிரேஷ்ட விரிவுரையாளர்
41. திரு.ரி.அருணகிரிநாதன் – விரிவுரையாளர்
42. திரு.கே. நவதர்சினி – சிரேஷ்ட விரிவுரையாளர்
43. திருமதி.எஸ். சிவானி – சிரேஷ்ட விரிவுரையாளர்
44. கலாநிதி. அனுசியா சத்தியசீலன்- சிரேஷ்ட விரிவுரையாளர்
45. திரு.பி.நிமலதாசன் – பேராசிரியார் கணக்கியல்துறை
46. கலாநிதி.பி.பிரதீப்காந் – சிரேஷ்ட விரிவுரையாளர்
47. திரு.ஆர். விஜயகுமரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
48. செல்வி.வை.தாசிகா விரிவுரையாளர்
49. திருமதி. மா.ரவீஸ்வரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
50. திருமதி. எஸ்.மகேந்திரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
51. திரு.அஜந்தன் – விரிவுரையாளர்
52. திரு. தேவராஜா – விரிவுரையாளர்
53. திரு.ஆர். ராஜேஷ்கண்ணன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
54. திருமதி. கே.சிவாஜி – சிரேஷ்ட விரிவுரையாளர்
55. திருமதி.எம். பகீரதன் – விரிவுரையாளர்
56. திருமதி. ரி. கிருசாந்தன் – விரிவுரையாளர்
57. கலாநிதி . எஸ்.ஜீவசுதன் -சிரேஷ்ட விரிவுரையாளர்
58. திரு. எஸ். ரவீந்திரன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
59. கலாநிதி. க.கஜவிந்தன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
60.திரு. அ. நித்திலவர்மன் – விரிவுரையாளர்
61.இணைப்பேராசிரியார் அ. கிருஷ்ணவேணி –
62. திருமதி. சி. கென்ஸ்மன் – விரிவுரையாளர்
63. திருமதி. எஸ். வைகுந்தவாசன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
64. சிரேஷ்ட பேராசிரியர் . பி.புஷ்பரட்ணம் – வரலாற்றுத்துறை
65. பேராசிரியர் வி.பி.சிவநாதன் – பேராசிரியர் – பொருளியல்துறை
66. பேராசிரியர்.இரா.சிவச்சந்திரன்- புவியியால்துறை
67. பேராசிரியார் எஸ்.சோசை
68. கலாநிதி ஆ.சரவணபவன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
69. கலாநிதி வி.சிறிதரன்- சிரேஷ்ட விரிவுரையாளர்
70. கலாநிதி க.சிதம்பரநாதன் – சிரேஷ்ட விரிவுரையாளர்
71.. திரு.யூட்வோல்டன் – சிரேஷ்ட விரிவுரையாளர் (பல்கலைக்கழக கல்லூரி யாழ்ப்பாணம்)
72.கலாநிதி.கேதீஸ்வரன் சிரேஷ்ட விரிவுரையாளர்
73.திரு.சி.சூரியகுமார்- சிரேஷ்ட விரிவுரையாளர்
74.கலாநிதி.எஸ் விஜயகுமார் சிரேஷ்ட விரிவுரையாளர்
75.திருமதி .சுபாஜினி சிவாகாந்தன் – விரிவுரையாளர்
76. திரு.என். பிரதீபராஜா – சிரேஷ்ட விரிவுரையாளர்
77. திரு.கு.குருபரன் (தலைவர் சட்டத்துறை யாழ்.பல்கலைக்கழகம்)
78. கலாநிதி வி.திருக்குமரன் (விவசாய பீடம் யாழ் பல்கலைக்கழகம்)

மனுவை ஆங்கிலத்தில் பார்ப்பதற்கு

தமிழ் மனுவின் PDF வடிவம்

Related Posts