தமிழ் சினிமாவில் சிறப்பாக நடனமாடக் கூடியவர் விஜய் – தனுஷ்

தனுஷ் தயாரிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘நானும் ரௌடிதான்’. இதில் விஜய் சேதுபதி நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தை அனிருத் இசையமைத்திருக்கிறார். தற்போது இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

dhanush-thanush-danush

நேற்று இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்திருக்கிறார். அவை வருமாறு,

கேள்வி: விஜய் பிடிக்குமா? அஜித் பிடிக்குமா?

பதில்: இருவரையும் பிடிக்கும். அவர்களிடம் நான் நிறைய கற்று வருகிறேன். உண்மைய சொல்லணும்னா, நான் ரஜினியின் தீவிர ரசிகன்.

கேள்வி: சூர்யா?

பதில்: கடுமையான உழைப்பாளி. இருவடைய உழைப்பு மற்றவர்களுக்கு ஊக்குவிப்பது போல் இருக்கும்.

கேள்வி: சமந்தா?

பதில்: மிக திறமையான நடிகை. அவருடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

கேள்வி: தங்கமகன் இசை வெளியீடு?

பதில்: இப்படத்தின் இசைக்காகதான் தற்போது உழைத்துக் கொண்டிருக்கிறோம். நவம்பர் மாதம் வெளியாகும். மெலோடி பிரியர்களுக்கு இப்படத்தின் பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.

கேள்வி: விஜய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பீர்களா?

பதில்: விஜய் கேட்டா கண்டிப்பாக நடிப்பேன்.

கேள்வி: விஜய், அஜித் படங்களை தயாரிப்பீர்களா?

பதில்: அப்படி அமைந்தால் அது பாக்கியம்.

கேள்வி: எப்போது உங்கள் அண்ணன் படத்தில் நடிப்பீர்கள்?

பதில்: கூடிய சீக்கிரம்.

கேள்வி: விஜய் சேதுபதி, நயன்தாரா?

பதில்: விஜய் சேதுபதி திறமையான நடிகர். நயன்தாராவை எல்லோருக்கும் பிடிக்கும்.

கேள்வி: ஏன் ரஜினி படத்தின் தலைப்பையே தேர்வு செய்கிறீர்கள்?

பதில்: நான் தேர்வு செய்யவில்லை. தானாகவே அமைகிறது.

கேள்வி: தமிழ் சினிமாவில் சிறப்பாக நடனமாடக் கூடியவர்?

பதில்: விஜய்

கேள்வி: பள்ளி பருவத்தில் உங்களுக்கு பிடித்த நடிகை?

பதில்: குஷ்பு மற்றும் சிம்ரன்

கேள்வி: விஜய் படங்களில் உங்களுக்கு பிடித்தது?

பதில்: கில்லி

கேள்வி: அஜித் படங்களில் உங்களுக்கு பிடித்தது?

பதில்: தீனா.

Related Posts