தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு! கைவிஷேட நேரங்கள் 

புதுவருஷ கைவிஷேட  நேரங்கள் குரோதி வருஷ கைவிஷேட நேரங்களாக வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சித்திரை முதல் நாள் (14/04/2024) ஞாயிற்றுக்கிழமை பகல் 7.57 ல் இருந்து 9.56 வரையிலும் அதே நாள் 9.59 ல் இருந்து 12.01 வரையிலான நேரமும் அதே நாள் ஞாயிற்றுக்கிழமை பகல் மாலை 6.17 ல் இருந்து 8.17 வரையிலான காலமும் மறுநாள் சித்திரை இரண்டாம் நாள் திங்கட்கிழமை பகல் 9.08 ல் இருந்து 9.51 வரையிலான நேரமும் அதே நாள் திங்கட்கிழமை பகல் 9.55ல் இருந்து 10.30 வரையிலான காலமும் கை விஷேடத்திற்குரிய சுப நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குரோதி வருஷம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கைவிஷேட நேரங்களாக சித்திரை 1ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பகல் 10.00 மணியில் இருந்து 11.15 வரையிலான நேரமும் அதேநாள் மாலை 6.30 இல் இருந்து 7.45 வரையிலான நேரமும் சித்திரை 2ம் நாள் திங்கட்கிழமை அதாவது (15.04.2024 )காலை 6.00 ல் இருந்து 7.25 வரையிலான நேரமும் அதே நாள் திங்கட்கிழமை பகல் 9.35 இல் இருந்து 10.35 வரையிலான நேரம் கைவிஷேட நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குரோதி வருஷம் வியாபாரம் செய்தல் புதுக்கணக்கு பதிதல் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சித்திரை 2ம் நாள் (15.04.2024) திங்கட்கிழமை பகல் 9.08 ல் இருந்து 9.51 வரையிலான நேரமும் அதே நாள் திங்கட்கிழமை பகல் 9.55 இல் இருந்து 10.30 வரையிலான நேரமும் சித்திரை 05 அதாவது (18.04.2024 )வியாழக்கிழமை பகல் 10.49 இல் இருந்து 11.50 வரையிலான நேரம் வியாபாரம் செய்வதற்கும் புதுக்கணக்கு பதிவதற்கும் சிறப்பானதாகும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி குரோதி வருஷப்பிறப்பின் வியாபாரம் புது கணக்குப்பதிதல் சித்திரை 2ம் நாள் (15.04.2024) திங்கட்கிழமை பகல் 10.00 ல் இருந்து 11.30 வரையிலான காலமும் சித்திரை 20ம் நாள் (03.05.2024) வெள்ளிக்கிழமை காலை 9.00 இல் இருந்து 10.15 வரையிலான காலமும் சித்திரை 23 (05.05.2024) திங்கட்கிழமை காலை 9.30 இல் இருந்து 10. 40 வரையிலான காலமுமம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வியாபாரம் புதுக்கணக்கு பதிவதற்கான சுப நேரங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts