வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தால் வறிய நிலையில் உள்ள இரண்டு தமிழ் குடும்பத்திற்கு வீடுகள் கையளிக்கப்பட்டன. குறித்த வீடுகள் இன்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன.
வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரெராவின் ஆலோசனை வழிகாட்டலில் இவ்வாறு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.
குருநாகலைச் சேர்ந்த சந்தன அழககோன் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ மேயர் ஆகியோரின் நிதி உதவியுடன் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
வவுனியா கணேசபுரம் பகுதியில் வசிக்கும் நிவர்சனா மற்றும் பம்பைமடு பகுதியில் வசிக்கும் மூர்த்தி ஆகியோருக்கே குறித்த வீடுகள் கையளிக்கபட்டுள்ளன.
குறித்த குடும்பத்தினர் வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்ந்து வந்த நிலையில் இராணுவத்தின் நல்லெண்ண நோக்குடன் குறித்த வீடுகள் அமைக்கபட்டு வீட்டிற்கு தேவையான நாற்காலிகள், மேசைகள், சமையல் உபகரணங்கள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளதுடன், வீட்டுதோட்டம் ஒன்றும் அமைக்கபட்டுள்ளது.
கணேசபுரத்தில் வசிக்கும் குறித்த வீடு வழங்கபட்ட மாணவியான நிவர்சனா வறுமை நிலையிலும் கடந்த வருடம் நடைபெற்ற புலமைபரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தைபெற்றிருந்தார். அவர் உயர்தரம் வரைக்கும் கற்பதற்கான கல்வி செலவிற்காக வன்னி கட்டளை தளபதி குமுதுபெரேராவின் ஆலோசனைக்கமைய மாதாந்தம் 2500 ரூபாய் வழங்கபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.