தமிழ் கலாச்சாரத்தை கற்று செல்லுங்கள் -சிங்கள மக்களுக்கு இராணுவ சிப்பாயின் அறிவுரை!!

நயினாதீவுக்கு சென்ற சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாகவும், அவர்களிடம் சிங்கள மக்கள் கற்றக்கொள்ள வேண்டிய பாடடங்கள் குறித்தும் இராணுவச் சிப்பாய் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. அதில் குறித்த இராணுவச் சிப்பாய் பின்வருமாறு சிங்கள மக்களுக்கு உபதேசம் பண்ணுகிறார்.

soldier-advice-army

“30 ரூபாய் கொடுத்தால் போட்ல (boat) கொண்டு போய் நாகதீபவில் இறக்கிறார்கள். நீங்கள் அங்க இருந்து வந்து புத்த சிலைக்கு முன்னால் போய் இருந்து போட்டோ பிடிச்சு பேஸ்புக் ல போடுறீங்கள். நீங்கள் பூ வைக்கும்போதும், விளக்கு கொழுத்தும் போதும் போட்டோ பிடிச்சு பேஸ்புக்ல போடுறீங்கள். உங்களுக்கு கிடைத்த பெரிய சுதந்திரம் இதுதான் என நினைக்கிறீர்கள். நீங்கள் கோயில்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் போய் பாருங்கள். அங்கு ஒவ்வொரு சட்டங்கள், ஒழுங்குகள் இருக்கு. அதனை முக்கியமாக தமிழ் மக்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

உங்களின் மனட்சாட்சியைக் கேட்டுப் பாருங்கள். 30 வருடமாக நாங்கள் சண்டை பிடித்தோம். எத்தனை பேர் விகாரைகளில் இந்த சட்ட திட்டங்களை கடைப்பிக்கிறீர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் இல்லை. நல்வழிப்படுத்தவே இதனைச் சொல்கிறேன். யாரையும் குத்திக் காட்டவில்லை. இலங்கையில் பெரிய கோயில்களில் ஒன்று நல்லூர் கோயில். அங்கு இப்பவும் அதே சட்டங்கள் கடைப்பிக்கப்படுகின்றன. இப்போது கொழும்பு விகாரைக்கு போனால் வெள்ளைச் சீலையும் வெள்ளைத் துண்டும் வைத்துள்ளார்கள். அது போல இந்து கோயில்களில் செய்கிறார்களா? வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள்.

இங்கு இரண்டு நாள் வந்துவிட்டு போவீர்கள். நாங்கள் இங்கு தொடர்ந்து இருக்கின்றோம். கலாச்சாரத்தை பேண வேண்டும். நாகதீபவில் 162 தமிழ் குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களை பார்ப்பார்கள். உங்களுடைய கலாச்சாரத்தை என்னவென்று புகட்டபோகிறீர்கள். பிரபாகரனின் வீட்டை உடைக்க இதுவே காரணம். நீங்கள் அங்கேயும் வந்து இதைத்தான் செய்யப் போகிறீர்கள். யுத்தம் முடிவடைந்து விட்டது. அவர்களின் மனங்களில் இருந்து அதனை எடுத்துப் போட வேண்டும். நீங்கள் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் தெற்கு சிங்களவர்களுக்கு வடக்கு தமிழர்களுக்கு என்று. இது ஒரு நாடு. எந்த இடத்திற்குச் சென்றாலும் அவர்களின் கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.

மாவீர்ர்களின் தூபிகளை அழித்தோம். ஏனென்றால் நீங்கள் கொழும்பிலிருந்து 10 பேர் வருவீர்கள். நாங்கள் அதே இடத்தில் எங்களுடைய வீரர்களின் தூபிகளை உருவாக்கி இருந்தால் நீங்கள் வணக்கம் செலுத்துவிர்களா? இல்லை. ஆனால் பிரபாகரன் உருவாக்கிய மாவீரர் இல்லங்களுக்கு அனைவரும் வணக்கம் செலுத்தித் தான் போவார்கள். அப்படித் தான் இருந்தது. அதனால் நான் நாங்கள் அழித்தோம். இந்தவேறுபாட்டினை புரிந்து கொள்ள வேண்டும் அதற்காகவே சொல்கிறேன். நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் வந்து சந்தோசமாக இருந்து போறீங்கள். எதனை கற்றுக் கொண்டு போகிறீர்கள். நாங்கள் இங்கு இருந்து இவர்களுடன் பழகுகின்றோம். நான் பயமில்லாமல் சொல்வேன்.

சிங்களவர்களால் தான் அழிவு கூடுதலாக உள்ளது. எந்த தமிழனோ, முஸ்லிமோ தன்னுடைய தாயையோ தங்கையையோ கற்பழிக்கவும் இல்லை. கழுத்தை வெட்டவும் இல்லை.செய்யிற எல்லாம் சிங்களவன் தான். நானும் ஒரு சிங்களவன் தான். பயம் இல்லாமல் சொல்லுவன். நீங்கள் இங்கு பிள்ளைகளைக் கூட்டி வருகிறீர்கள். இங்கு உள்ள கலாச்சாரத்தை கற்றுக் கொடுங்கள். வேறுபட்ட கலாச்சாரத்தை செல்லிக் கொடுங்கள்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Posts