தமிழ் கலாச்சாரத்தின் மீதான ஊடுருவலை அனுமதிக்க முடியாது

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழகத்தில் மாணவர்கள் துவக்கி வைத்த அறவழி எழுச்சி போராட்டம் நேற்று சில இடங்களில் வன்முறை போராட்டமாக முடிந்தது. சில தீய சக்திகளின் ஊடுவலால் இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்…

சென்னையில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ் கலாச்சாரத்தின் மீதான ஊடுருவலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உண்மையை யாராலும் மறைக்க முடியாது. இளைஞர்கள் மீது கட்சி சாயம் பூசப்படுகிறது. ஜல்லிக்கட்டை பொறுத்தமட்டில் தமிழகத்தில் காளைகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Related Posts