தமிழ் கட்சிகள் உட்பட மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு – தேர்தல்கள் ஆணையகம்

2021 ஆம் ஆண்டுக்காக மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இந்தக் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தமிழ் மக்கள் கூட்டணி, புதிய லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணி கட்சி வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts