தமிழ் உணர்வுள்ள வேட்பாளருக்கு கூட்டமைப்பின் ஆதரவு : சுரேஷ்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமான வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

suresh

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சில விடயங்கள் குறித்து கூட்டமைப்பு கவனம் செலுத்தி வருகிறது. இருப்பினும் தேர்தல் தொடர்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு துரிதமாக அறிவிக்கப்படும்.

மேலும் போரில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள், வடக்கு, கிழக்கு தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பது, தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு வரும் பல்வேறு அழுத்தங்களை நிறுத்துவது ஆகியன இந்த விடயங்களில் அடங்குகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்க போகும் வேட்பாளரை தெரிவு செய்யும் போது இந்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Posts