தமிழ் இலக்கியப் பெருவிழாவுக்கு ஆய்வுக் கட்டுரைகள் கோரல்

வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் வடமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழாவுக்கான ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன.

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எமது கலை இலக்கியங்களில் சமகால நிலைமையினை மதிப்பிடுவதும் எதிர்காலத்துக்கான செயல்நெறியினை இனங்காண்பதையும் நோக்காகக்கொண்டு ஆய்வரங்கு இடம்பெறவுள்ளது.

‘ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்தில் உலகமயமாதல் உள்ளூர் மயமாதலும்’ என்ற கருப்பொருளிலே ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன.

அதற்கமைய சுதேச கலை வடிவங்களின் அல்லது பண்பாட்டு அடையாளங்களை பேணுதல் – மேம்படுத்தல், கலை இலக்கியங்களும் இனவரைவியலும், சமூக நீதிக்கான சமூக மாற்றத்திற்கான கலை இலக்கியங்கள், மொழி பெயர்ப்பு இலக்கியங்களும் பண்பாட்டிடைத் தொடர்பாடலும், சமகால ஆற்றுகை காண்பிய கலைகளின் இருப்பும் செல்நெறியும், வெகுஜன ஊடகங்களின் சமூகப் பொறுப்பும் ஊடக அறிவும் என்ற தலைப்புகளின் கீழே ஆய்வொன்றை ஆய்வாளர் தெரிவு செய்து அனுப்ப முடியும்.

மேலும், ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுச் சுருக்கத்தினை 300 சொற்களுக்கு குறையாமல் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர் வடமாகாண பண்பாட்டுத் திணைக்களம் இல.175 பருத்தித்துறை வீதி ஆனைப்பந்தி யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Related Posts