Ad Widget

தமிழ் அரசியல் பிரமுகர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் பகிரங்க அழைப்பு

யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்து பல்வேறு துன்ப சுமைகளோடு வாழ்ந்து வருகின்ற எமது மக்களுக்கு உதவிட முன்வருமாறு தமிழ் அரசியல் பிரமுகர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

vaddu-YMHA

வன்னி விழிப்புணர்வற்றோர் சங்க வெள்ளை பிரம்பு தின நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற போது நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வட்டு இந்து வாலிபர் சங்க தலைவர் கு.பகீரதன் அவர்கள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.சிறீதரன் முன்னிலையில் இந்த பகிரங்க அழைப்பை விடுத்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் யுத்த அனர்தங்களினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தினை மேம்படுத்திடவும் அங்கவீனமானவர்களின் வாழ்வினில் ஒளியேற்றிடவும் என வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் கடந்த 6 ஆண்டுகளாக வட்டுவாழ் மக்கள் புலம்பெயர் உறவுகள் மற்றும் நண்பர்களின் உதவியோடு பல்வேறு பாரிய வேலை திட்டங்களை நாங்கள் நடாத்தி வருகின்றோம் என தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வினை மேம்படுத்திட தமிழ் அரசியல் பிரமுகர்கள் தமக்குள் இருக்கின்ற கட்சி சார்பான பிரச்சனைகளை ஒதுக்கி விட்டு பல்வேறு துன்ப சுமைகளோடு வாழ்ந்து வருகின்ற எங்கள் உறவுகளின் வாழ்வு மேம்படவும் சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்ற எங்கள் எதிர்கால சந்ததியின் எதிர்காலம் சிறந்திடவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தங்களின் அவயவங்களை இழந்து தாய் தந்தையரை இழந்து கணவன்மாரை இழந்து தங்களின் பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு தமது எதிர்காலம் பற்றி சிந்தித்து கொண்டு இருக்கின்ற மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தார்மீக கடமையினை காலம் தாழ்த்தாது மேற்கொள்ள அனைத்து தமிழ் அரசியல் பிரமுகர்களும் முன் வர வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ் அரசியல் பிரமுகர்களுக்கு ஆண்டு தோறும் அரசால் அபிவருத்திக்காக வழங்கப்படுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெரும் பகுதியை மாவட்ட பேதம் இன்றி ஜக்கிய நாடுகள் சபையால் இலங்கையிலே யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கணிக்கப்பட்ட வன்னி மாவட்டத்திற்க்கு தம்மாலான உதவிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வேண்டிக் கொண்டார்.

இந் நிகழ்வில் கல்ந்து கொண்ட விழிப்புலன் அற்ற உறவுகளுக்கென வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபா பெறுமதியான 100 வெள்ளைப் பிரம்பு, 200 குடை என்பனவற்றோடு மதிய போசனமும் வழங்கப்பட்டது.

Related Posts